சினிமா செய்திகள்

“மருதநாயகம் படம் தயாராகும்” -கமல்ஹாசன் + "||" + Try to Maruthanayakam movie - Kamal Haasan

“மருதநாயகம் படம் தயாராகும்” -கமல்ஹாசன்

“மருதநாயகம் படம் தயாராகும்” -கமல்ஹாசன்
மருதநாயகம் படத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுத்துக்கொண்டு இருக்கிறேன் என்று கமல்ஹாசன் கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் போட்டியாளர்களாக இருப்பவர்கள் கமல்ஹாசனிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். ஏற்கனவே தயாராகி கிடப்பில் போடப்பட்ட மருதநாயகம் படம் பற்றியும் கேள்வி எழுப்பினர். அவற்றுக்கு பதில் அளித்து கமல்ஹாசன் கூறியதாவது:-

“நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்க ஆசை இல்லையா? என்று கேட்கிறீர்கள். நடிகர் சங்கத்தை பொறுத்தவரை நான் ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து வழி நடத்துகிறேன். எம்.ஜி.ஆருடன் ‘நாளை நமதே’ படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை தவறவிட்டு விட்டேன். நாளை நமதே படத்தை என்னால் ‘ரீமேக்’ செய்ய இயலாது. அதனால் அந்த படத்தின் தலைப்பை மட்டும் வாங்கி வைத்து இருக்கிறேன்.

சிவாஜி நடித்துள்ள தேவர் மகன் படத்தை ரீமேக் செய்து அதில் சிவாஜிகணேசன் நடித்த வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். உலகின் தலை சிறந்த காதல் ராவணனின் காதல். பத்து தலைகள் இருந்தாலும் ராவணனின் காதல் ஒரு தலை காதல்தான். நடக்கவே நடக்காது என்று தெரிந்தும் ராவணன் காதலித்தார் என்றால் அவருக்கு எத்தனை அன்பும் வெறியும் இருந்திருக்க வேண்டும்.

மருதநாயகம் படத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுத்துக்கொண்டு இருக்கிறேன். குஷ்புவுடன் நடித்த படங்களில் மைக்கேல் மதன காமராஜன் எனக்கு பிடித்த படம். அந்த படங்களில் 4 கதாநாயகிகள் இருந்தனர். ஆனாலும் குஷ்பு உதவி இயக்குனராக பணியாற்றி கொண்டே அதில் நடித்தார்.”

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் பிரதமர் மோடி முன்னோடியாக செயல்பட வேண்டும்- கமல்ஹாசன்
பேனர் கலாச்சாரத்திற்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்தால் அதுவே அவருக்கு பெரிய விளம்பரமாக அமையும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
2. அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ- கமல்ஹாசன் ஆவேசம்
அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ; அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவீட் செய்துள்ளார்.
3. சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல்
பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்தார்.
4. ‘இந்தியன் - 2’ படப்பிடிப்பில் கமல்ஹாசன்
கமல்ஹாசன் நடித்து 1996-ல் திரைக்கு வந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இந்தியன்-2 என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் படமாக்கி வருகிறார்.
5. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.