சினிமா செய்திகள்

சண்முக பாண்டியன் ஜோடியாக நடிக்க பிரபல கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை! + "||" + Acting opposite Shanmukha Pandian Negotiating with famous heroines!

சண்முக பாண்டியன் ஜோடியாக நடிக்க பிரபல கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை!

சண்முக பாண்டியன் ஜோடியாக நடிக்க பிரபல கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை!
‘சகாப்தம்,’ ‘மதுரை வீரன்’ ஆகிய படங்களில் நடித்த சண்முக பாண்டியன் (விஜயகாந்தின் மகன்) அடுத்து நடிக்கும் படத்துக்கு, ‘மித்ரன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
 இது, கிராமிய பின்னணியிலான பொழுதுபோக்கு குடும்ப படமாக இருக்கும் என்கிறார், படத்தின் டைரக்டர் ஜி.பூபாலன். இவர் மேலும் கூறியதாவது:-

“மித்ரன் வணிக ரீதியான படம். ஒரு கிராமத்து இளைஞனை சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு போலீஸ்காரராகி தனது பக்கத்து ஊருக்கு வந்து கடமையில் சேருகிறார். காதல், அதிரடிச் சண்டை காட்சிகள், நகைச்சுவை, தாய்-மகன் பாசம் என அனைத்து தரப்பினரின் ரசனைகளை பூர்த்தி செய்யும். படத்தின் சிறப்பு அம்சமாக ஒரு பாடல் இடம் பெறுகிறது. அதை ரசிகர்கள் எப்படி ரசிக்கப் போகிறார்கள் என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

படத்தில் வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்க, அழகம்பெருமாள், சாய் தீனா, பவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கதாநாயகனுடன் படம் முழுக்க வருகிற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் முனீஷ்காந்த் நடிக்கிறார். தேசிய விருது பெற்ற அர்ச்சனா, கதாநாயகனின் தாயாக நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க பிரபல கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.”