சினிமா செய்திகள்

“பட்டாஸ், அனைத்து தரப்பினருக்கும் ஒரு விருந்தாக இருக்கும்” - தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் + "||" + "Pattas" will be a treat for all parties - Producer T.G.Thyagarajan

“பட்டாஸ், அனைத்து தரப்பினருக்கும் ஒரு விருந்தாக இருக்கும்” - தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன்

“பட்டாஸ், அனைத்து தரப்பினருக்கும் ஒரு விருந்தாக இருக்கும்” - தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன்
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்க, தனுஷ் நடிக்கும் 39-வது படத்துக்கு, ‘பட்டாஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதுபற்றி தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் சொல்கிறார்:-
“எங்கள் நிறுவனம் தயாரிக்கும் 34-வது படம், இது. படம், தனுஷ் ரசிகர்களுக்கு ஆடம்பரமான விருந்தாக இருக்கும். நிச்சயமாக எல்லா தரப்பினரையும் திருப்தி செய்யும் படமாக இருக்கும். அவரது இளமை தோற்றம் வெளியாகி, அனைவரையும் பிரமிக்க வைத்தது.

குடும்ப பொழுதுபோக்கு படங்களை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ‘பட்டாஸ்,’ அந்த கொள்கைக்கு நியாயம் சேர்க்கும் படமாக இருக்கும். முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கி, இரவு-பகலாக நடைபெறுகிறது.

விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்கள். ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் டைரக்டு செய்கிறார். தனுசுடன் மெஹ்ரீன் பிர்ஸாடா, நவீன் சந்திரா, சினேகா ஆகியோர் நடிக்கிறார்கள்.”