சினிமா செய்திகள்

தொழில் அதிபரை மணந்த ராக்கி சாவந்த் + "||" + Rakhi Sawant, married a businessman

தொழில் அதிபரை மணந்த ராக்கி சாவந்த்

தொழில் அதிபரை மணந்த ராக்கி சாவந்த்
எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.
பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். அடிக்கடி சர்ச்சை கருத்துக்களையும் வெளியிட்டு வந்தார். இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தாவை கண்டித்தார்.

சண்டிகாரில் நடனம் ஆட சென்ற இடத்தில் மல்யுத்த வீராங்கனையுடன் மோதி காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சம்பவம் நடந்தது.

யோகா மீது ஆர்வம் கொண்ட அவர் கவர்ச்சி உடையில் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

கடந்த சில நாட்களாக மணப்பெண் கோலத்தில் இருக்கும் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார். அதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் நடந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு எனக்கு 2020-ல்தான் திருமணம் நடக்கும் என்று கூறிவந்தார்.

இந்த நிலையில் தனக்கு திருமணம் நடந்துவிட்டதாக ராக்கி சாவந்த் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “எனக்கு திருமணம் ஆகிவிட்டது. அதை இப்போது உறுதி செய்கிறேன். எனது கணவர் பெயர் ரிதேஷ். தொழிலதிபரான அவர், லண்டனில் வசிக்கிறார். திருமணம் முடிந்ததும் லண்டன் சென்றுவிட்டார். எனக்கு விசா கிடைத்ததும் நானும் லண்டன் செல்வேன். அற்புதமான கணவர் கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.