சினிமா செய்திகள்

“சினிமா மட்டுமே வாழ்க்கை இல்லை” -காஜல் அகர்வால் + "||" + Cinema is not the only life - Kajal Agarwal

“சினிமா மட்டுமே வாழ்க்கை இல்லை” -காஜல் அகர்வால்

“சினிமா மட்டுமே வாழ்க்கை இல்லை” -காஜல் அகர்வால்
சினிமா மட்டுமே வாழ்க்கை இல்லை என்று நடிகை காஜல் அகர்வால் கூறினார்.
ஜெயம்ரவியுடன் காஜல் அகர்வால் நடித்துள்ள ‘கோமாளி’ படம் வருகிற 15-ந் தேதி திரைக்கு வருகிறது. பாரிஸ் பாரிஸ் பட வேலைகளும் முடிந்து தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தெலுங்கில் நடித்துள்ள ரணரங்கம் படமும் விரைவில் வெளியாக உள்ளது. காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

“சினிமா துறையில் அடி எடுத்து வைத்ததில் இருந்து ஓய்வு இல்லாமல் வேலை செய்துகொண்டே இருக்கிறேன். படப்பிடிப்பு, அந்த படத்தை விளம்பரப்படுத்தும் விழாக்கள், அதன்பிறகு புதிய கதைகள் கேட்பது, இப்படித்தான் எனது நேரம் எல்லாமே போகிறது. எத்தனை வேலை இருந்தாலும் சரி, நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிக்க தவறமாட்டேன்.

நள்ளிரவை தாண்டினாலும் சரி எவ்வளவு சோர்வாக இருந்தாலும் சரி கொஞ்ச நேரம் செய்தி சேனல்களை பார்க்க தவறுவது இல்லை. அதனால் சமூகத்தில் என்ன நடக்கிறது. நம்மை சுற்றி என்ன நடக்கிறது, யார் எதை சாதித்து இருக்கிறார்கள் போன்ற விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும்.

சினிமா இல்லாத வாழ்க்கையை கற்பனையில் கூட என்னால் நினைக்க முடியவில்லை. அதே நேரம் சினிமா மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதும் எனக்கு தெரியும். அதனால்தான் சமூகத்தில் சாதாரண மனுஷியாக எதை தெரியவேண்டுமோ அதை தெரிந்துகொள்கிறேன். எதை செய்ய வேண்டுமோ அதை செய்கிறேன். சாவதுவரை சினிமாவில்தான் இருப்போம் என்ற நிலையில் யாரும் இல்லை.”

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.