சினிமா செய்திகள்

திருநங்கையாக நடித்தவிஜய் சேதுபதிக்கு விருது + "||" + For Vijay Sethupathi Award

திருநங்கையாக நடித்தவிஜய் சேதுபதிக்கு விருது

திருநங்கையாக நடித்தவிஜய் சேதுபதிக்கு விருது
ஆஸ்திரேலியாவில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் இந்திய திரைப்பட விழா நடந்து வருகிறது. வருகிற 15-ந் தேதி வரை இந்த விழா நடக்கிறது. இதில் 60 படங்கள் பங்கேற்கின்றன. விழாவில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஷாருக்கான், அர்ஜுன் கபூர், நடிகைகள் காயத்ரி, தபு, டைரக்டர் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த படம் ஆகிய பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. இதில் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. படத்தில் அவர் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவர் நடிப்புக்கு ஏற்கனவே பாராட்டுகள் கிடைத்தன. இப்போது சிறந்த நடிகர் விருதையும் பெற்றுள்ளார்.

ரன்வீர்சிங் நடித்துள்ள கல்லிபாய் இந்தி படம் சிறந்த படமாக தேர்வானது. அந்தாதுன் படத்தை டைரக்டு செய்த ஸ்ரீராம் ராகவனுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்தது. இதே படத்தில் வில்லியாக நடித்து இருந்த தபு சிறந்த நடிகை விருதை பெற்றார். விழாவில் ஷாருக்கானுக்கு திரையுலக வாழ்நாள் சாதனைக்காக சிறப்பு விருது வழங்கப்பட்டது.