சினிமா செய்திகள்

நடிகை விஜயலட்சுமிக்கு உதவிய ரஜினிகாந்த் + "||" + Rajinikanth helped actress Vijayalakshmi

நடிகை விஜயலட்சுமிக்கு உதவிய ரஜினிகாந்த்

நடிகை விஜயலட்சுமிக்கு உதவிய ரஜினிகாந்த்
என்னுடைய கஷ்டங்களை கேட்டு ரஜினிகாந்த் எனக்கு உதவி செய்தார் என்று நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.
விஜய், சூர்யாவுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்தவர் விஜயலட்சுமி. கடைசியாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் அண்ணியாக வந்தார். கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டு பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

பண கஷ்டத்தில் இருப்பதாகவும் ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தில் இருக்கிறேன் என்றும் பேசி விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டார். ரஜினிகாந்த் எனக்கு உதவ வேண்டும் என்றும் வீடியோவில் கூறியிருந்தார். இப்போது இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் விஜயலட்சுமி பேசி இருப்பதாவது:-

“வீடியோவில் எனது கஷ்டங்களை பகிர்ந்து ரஜினியிடம் ஒரு முறை பேச வேண்டும் என்று கூறினேன். இதை பார்த்து ரஜினிகாந்த் என்னை போனில் தொடர்பு கொண்டார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அன்போடு எனது பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுத்ததுடன், நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசினார்

அவர் சிறந்த மனிதர். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அவருடையை எண்ணத்தை மதிக்கிறேன். அவர் மீது நான் கொண்ட மரியாதை நூறு மடங்கு அதிகரித்துவிட்டது. இப்படி ஒரு நல்ல மனிதர்தான் நமக்கு தலைவராக இருக்க வேண்டும். என்னுடைய கஷ்டங்களை கேட்டு உதவி செய்தார்.

ரஜினிகாந்த் எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும். ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய எளிமை அவரிடம் அதிகமாகவே இருக்கிறது. இப்போது நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.”

இவ்வாறு விஜயலட்சுமி கூறியுள்ளார்.