சினிமா செய்திகள்

மகளுக்கு ஆபாச மிரட்டல்-நயன்தாரா பட வில்லன் நடிகர் ஆவேசம் + "||" + Nayanthara is the movie villain Actor is passionate

மகளுக்கு ஆபாச மிரட்டல்-நயன்தாரா பட வில்லன் நடிகர் ஆவேசம்

மகளுக்கு ஆபாச மிரட்டல்-நயன்தாரா பட வில்லன் நடிகர் ஆவேசம்
தமிழில் நயன்தாரா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்தவர் அனுராக் காஷ்யப். இந்தி பட உலகில் பிரபல இயக்குனராக உள்ளார்.
இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதும் “மோடி சார் உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் வெற்றியை கொண்டாடும் தொண்டர்கள் உங்கள் எதிர்பாளனாகிய எனது மகளை மிரட்டி உள்ளனர். அவர்களை எப்படி சமாளிப்பது என்று சொல்லி கொடுங்கள் என்று கூறியிருந்தார்.


அத்துடன் மகளுக்கு பலாத்கார மிரட்டல் விடுத்தவரின் பதிவையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து இணைத்து இருந்தார். அவரது பதிவுக்கு பதில் அளித்த பா.ஜனதாவை சேர்ந்த அசோக் பண்டிட் “பா.ஜனதா வெற்றியால் உலகமே மகிழ்ச்சியாக இருக்கும் இந்த தருணத்தில் மோடிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக யாரோ ‘போட்டோ ஷாப்’ எடுத்து பரப்பும் செய்தி இது” என்று கூறியிருந்தார்.

இதனால் கோபமான அனுராக் காஷ்யப், இது நிஜமாகவே வந்த மிரட்டல்தான் இன்ஸ்டாகிராமில் சென்று பாருங்கள் என்றார். இதைதொடர்ந்து இந்த விவாதம் கடுமையானது. இதையடுத்து டுவிட்டரில் இருந்து விலகுவதாக அனுராக் காஷ்யப் அறிவித்துள்ளார். அவரது கடைசி பதிவில், “பெற்றோருக்கு போனில் கொலை மிரட்டலும், மகளுக்கு ஆன்-லைனில் மிரட்டலும் வரும்போது யாரும் பேச விரும்ப மாட்டார்கள். குண்டர்கள் அதிகாரத்துக்கு வரும்போது வன்முறைதான் வாழ்க்கையாக இருக்கும். புதிய இந்தியாவில் அனைவருக்கும் வாழ்த்துக்கள். டுவிட்டரில் இருந்து விலகுகிறேன்” என்று கூறியுள்ளார்.