தேசிய விருது சர்ச்சை: மன்னிப்பு கேட்ட மம்முட்டி


தேசிய விருது சர்ச்சை: மன்னிப்பு கேட்ட மம்முட்டி
x
தினத்தந்தி 12 Aug 2019 1:30 AM GMT (Updated: 11 Aug 2019 7:44 PM GMT)

தேசிய திரைப்பட விருதுகள் இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர்.

தேசிய திரைப்பட விருதுகள் இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. இந்தி திரைப்படங்கள் 14 தேசிய விருதுகளையும், கன்னட திரைப்படங்கள் 10 விருதுகளையும் பெற்றன. மலையாள, தெலுங்கு படங்களுக்கு தலா 7 விருதுகள் கிடைத்தன. மராத்தி மொழி படங்கள் 6 விருதுகளையும், குஜராத்தி படங்கள் 3 விருதுகளையும் பெற்றன.

தமிழுக்கு ஒரு விருதை தவிர வேறு தேசிய விருதுகள் கிடைக்கவில்லை. மலையாளத்தில் பேரன்பு படத்தில் நடித்ததற்காக மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். இதனால் தேசிய விருது நடுவர் குழு தலைவர் ராகுல் ரவைல் முகநூல் பக்கத்துக்கு சென்று அவரை கண்டித்து அவதூறாக கருத்துக்கள் பதிவிட்டனர். இதையடுத்து ராகுல் ரவைல் மம்முட்டிக்கு கடிதம் எழுதினார். அதில், “உங்கள் ரசிகர்களின் அவதூறு கருத்துக்களை எதிர்கொண்டு வருகிறேன். பேரன்பு படத்துக்கு விருது தரவில்லை என்று விமர்சிக்கிறார்கள். நடுவர் தீர்ப்பை யாரும் கேள்வி கேட்க முடியாது. நீங்கள் நடித்த பேரன்பு படத்தை உள்ளூர் குழு நிராகரித்து விட்டது.

மத்திய குழுவுக்கு அந்த படம் வரவில்லை. எனவே ரசிகர்களை கட்டுப்படுத்துங்கள்” என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த மம்முட்டி, ”எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. நடந்த சம்பவங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Next Story