சினிமா செய்திகள்

சுருள் முடியை காப்பி அடிக்கிறேன் என்பதா? கங்கனா ரணாவத்துடன் டாப்சி மோதல் + "||" + With Kangana Ranaut Topsy Conflict

சுருள் முடியை காப்பி அடிக்கிறேன் என்பதா? கங்கனா ரணாவத்துடன் டாப்சி மோதல்

சுருள் முடியை காப்பி அடிக்கிறேன் என்பதா? கங்கனா ரணாவத்துடன் டாப்சி மோதல்
கங்கனா ரணாவத் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஹிருத்திக் ரோஷன் காதலித்து ஏமாற்றியதாக குற்றம் சாட்டினார்.
இருவரும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். பெண்களுக்கு எதிராக பேசியதாக சல்மான்கானுடன் மோதினார். இயக்குனர் பஹலாஜ் நிஹலானி உள்ளாடை அணியாமல் ஆபாசமாக தன்னை போஸ் கொடுக்க வற்புறுத்தினார் என்றார்.

இப்போது கங்கனாவுக்கும் டாப்சிக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. ‘ஜட்ஸ்மெண்டல் ஹாய் க்யா’ என்ற இந்தி படத்தின் டிரெய்லரை டுவிட்டரில் பாராட்டிய டாப்சி, கங்கனாவின் பெயரை குறிப்பிடவில்லை. இன்னொரு நிகழ்ச்சியில் பேசும்போது, “அவர் (கங்கனா ரணாவத்) தனது பேச்சுக்களை இரண்டு முறை வடிகட்டி பேச வேண்டும்” என்றார்.


இதனால் டாப்சியை கங்கனாவின் சகோதரி மலிவான போலி என்று டுவிட்டரில் விமர்சித்தார். கங்கனாவின் சுருள் தலைமுடியை காப்பி அடிக்கிறார் என்றும் குறைகூறினார்.

இதற்கு பதில் அளித்துள்ள டாப்சி, ”நான் சொன்ன கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். பேச்சுக்களை வடிகட்டித்தான் பேச வேண்டும். இல்லையேல் பிரச்சினை ஏற்படும். நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டால் என்ன செய்ய முடியும். நான் எதையும் காப்பி அடிக்கவில்லை. கங்கனாவுக்கு மட்டும்தான் சுருள் தலைமுடிக்கான காப்புரிமை உள்ளதா? எனக்கும் பிறந்ததில் இருந்தே தலைமுடி அப்படித்தான் இருக்கிறது” என்றார்.

இந்த மோதல் இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.