சினிமா செய்திகள்

குடிபோதையில் நடிகையை அடித்து உதைத்த கணவர் கைது + "||" + Husband arrested for assaulting actress

குடிபோதையில் நடிகையை அடித்து உதைத்த கணவர் கைது

குடிபோதையில் நடிகையை அடித்து உதைத்த கணவர் கைது
பிரபல இந்தி நடிகை ஸ்வேதா திவாரி. இவர் பல இந்தி டி.வி. தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
ஸ்வேதா திவாரியும், இந்தி நடிகர் ராஜா சவுத்ரியும் நீண்ட நாட்களாக காதலித்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

இந்த நிலையில் இருவருக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 9 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு பாலக் என்ற மகள் இருக்கிறார். அதன்பிறகு இந்தி நடிகர் அபினவ் கோலிக்கும், ஸ்வேதா திவாரிக்கும் காதல் மலர்ந்தது. 2013-ம் ஆண்டு அபினவ் கோலியை ஸ்வேதா திவாரி 2-வது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

அபினவ்வுக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினமும் போதையில் வீட்டுக்கு வந்து ஸ்வேதா திவாரியுடன் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டது. குடும்பத்தினர் சமரசம் செய்துவைக்க முயற்சித்தும் பலன் இல்லை. இந்த நிலையில் கணவர் அபினவ் மீது ஸ்வேதா திவாரி மும்பை காந்திவிலி போலீசில் புகார் செய்தார்.

புகார் மனுவில் அபினவ் தன்னையும், தனது மகளையும் தினமும் குடித்துவிட்டு வந்து போதையில் அடித்து துன்புறுத்துகிறார் என்று கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அபினவ்வை கைது செய்தனர்.