சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேசுக்கு பிடித்த நடிகர்கள் + "||" + Keerthi Suresh's favorite actors

கீர்த்தி சுரேசுக்கு பிடித்த நடிகர்கள்

கீர்த்தி சுரேசுக்கு பிடித்த நடிகர்கள்
தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்போது மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க கதையும் கேட்டு வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி. மீண்டும் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க மாட்டேன். சாவித்திரி படம்தான் நான் நடித்த முதலும் கடைசியுமான வாழ்க்கை வரலாறு படமாக இருக்கும். சாவித்திரி என்ற மகா நடிகை வேடத்தில் நடித்த பிறகு இன்னொரு வாழ்க்கை படத்தில் நடிப்பது சிறப்பாக இருக்காது.

சாவித்திரி வாழ்க்கை படப்பிடிப்பு முடிந்ததும் எதையோ விட்டு போனமாதிரி மனம் உடைந்து அழுது விட்டேன். இந்த சினிமா படப்பிடிப்பில் மனதோடு எல்லோரும் இணைந்து இருந்தோம். நான் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் ரசிகை. இந்தியில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, அலியாபட் மிகவும் பிடித்தவர்கள். நயன்தாராவின் ‘டிரெஸ் சென்ஸ்’, சிம்ரனின் நடனம் பிடிக்கும்.

ஒரு தடவை நகைக்கடையை திறந்து வைக்க சென்றபோது ஒரு ரசிகர் பார்சலை கொடுத்தார். அதை திறந்தபோது எனது படங்கள் அடங்கிய ஆல்பமும் என்னை காதலிக்கிறேன் என்று எழுதிய ஒரு கடிதமும் இருந்தது. கல்லூரி நாட்களில் யாரும் காதல் கடிதம் தரவில்லை. இது முதல் காதல் கடிதம் என்பதால் பத்திரமாக வைத்து இருக்கிறேன்.”

இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கார்த்திக் சுப்புராஜ் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகி!
டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் ஒரு புதிய படத்தில், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையம்சம் உள்ள படம்.
2. கீர்த்தி சுரேஷ் கைவசம் படங்கள் இல்லாதது ஏன்?
கீர்த்தி சுரேஷ் இப்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். அவரின் நடிப்பில் வந்த `மகாநடி' படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
3. மோகன்லால் மகனுடன் நடிக்க மறுப்பு!
மலையாள பட உலகின் ‘சூப்பர் ஸ்டார்’களில் ஒருவரான மோகன்லாலின் மகன் பிரணவ்.
4. கீர்த்தி சுரேசுக்கு பிடித்த உடைகள்
தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ் தனக்கு பிடித்த ஆடைகள் பற்றி கூறியதாவது:–
5. அரசியலில், கீர்த்தி சுரேஷ்?
கீர்த்தி சுரேஷ் மிக குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்டார்.