சினிமா செய்திகள்

கமல்-காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கியது + "||" + Kamal-Kajal Aggarwal starrer Indian-2 has started shooting

கமல்-காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கியது

கமல்-காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கியது
கமல்ஹாசன் நடித்து 1996-ல் திரைக்கு வந்து வசூல் குவித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இந்தியன்-2 என்ற பெயரில் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர் ஈடுபட்டார்.
இந்தியன்-2  படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஒரு சில காட்சிகள் படமானதும் கமலின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை ஷங்கர் நிறுத்திவிட்டார்.

படத்துக்கான பட்ஜெட்டிலும் பிரச்சினை ஏற்பட்டது. அதன்பிறகு கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். இதனை மறுத்த படக்குழுவினர் விரைவில் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கும் என்று உறுதிப்படுத்தினர். பின்னர் வெளிநாட்டு கலைஞர்களை வைத்து கமல்ஹாசனின் வயதான தோற்றத்தை மாற்றி புகைப்படம் எடுத்தனர். அந்த தோற்றம் சிறப்பாக வந்துள்ளதாக படக்குழுவினர் திருப்தியானார்கள்.

இந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே நேற்று தொடங்கியது. படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படத்தை ரகுல்பிரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தி உள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் அருகிலேயே இந்தியன்-2 படப்பிடிப்பையும் நடத்துகின்றனர்.

இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ரகுல்பிரீத் சிங்குடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் நடிக்கின்றனர். வித்யூத் ஜமால் வில்லனாக வருகிறார். அனிருத் இசையமைக்கிறார்.