மாநில செய்திகள்

45-வது நாள்: அத்திவரதரை குடும்பத்துடன் நள்ளிரவில் தரிசித்த ரஜினிகாந்த்! + "||" + Day 45 athivarathar Rajinikanth at midnight with his family

45-வது நாள்: அத்திவரதரை குடும்பத்துடன் நள்ளிரவில் தரிசித்த ரஜினிகாந்த்!

45-வது நாள்: அத்திவரதரை குடும்பத்துடன் நள்ளிரவில் தரிசித்த ரஜினிகாந்த்!
காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளின் நள்ளிரவில் குடும்பத்துடன் ரஜினிகாந்த் தரிசித்தார்.
சென்னை,

காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளான இன்று இளஞ்சிவப்பு பட்டாடையில் ராஜமகுடம் அணிந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதரை தரிசிக்க பல லட்சம்  மக்கள்  நீண்ட வரிசையில்  காத்திருக்கின்றனர்.

நின்ற கோலத்தில் வசந்த மண்டபத்தில் அருள் பாலிக்கும் அத்தி வரதரை  நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் நள்ளிரவில் தரிசனம் செய்தார்.

நேற்று இரவு சுமார் 12.30 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்த் அவரது  குடும்பத்துடன் வந்து அத்திவரதரை தரிசித்தார்.

ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடியவிருக்கும் நிலையில் இன்று காலை முதல் தற்போது வரை சுமார் 50 ஆயிரம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர். மேலும் 2 லட்சம் பேர் தரிசிக்க காத்திருக்கின்றனர். இது இறுதிக்கட்டம் என்பதால் மக்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் உத்திரமேரூர் அருகே மகன் கண்டித்ததால் விவசாயி தற்கொலை
உத்திரமேரூர் அருகே மகன் கண்டித்ததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
2. காஞ்சீபுரம் அருகே காரை வழிமறித்து கத்திமுனையில் பெண் டாக்டரிடம் நகை-பணம் பறிப்பு
காஞ்சீபுரம் அருகே காரை வழிமறித்து பெண் டாக்டரிடம் கத்தி முனையில் 10 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை வழிப்பறி செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் ஸ்ரேயா?
தர்பார் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் ஸ்ரேயா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
4. தர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது - நடிகர் ரஜினிகாந்த்
தர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்தார்.
5. நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியுற்றால் திமுக தான் காரணம் - கராத்தே தியாகராஜன்
நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியுற்றால் திமுக தான் காரணமாக இருக்கும் என கராத்தே தியாகராஜன் கூறி உள்ளார்.