சினிமா செய்திகள்

“திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” - வரலட்சுமி சரத்குமார் + "||" + "I Will Not Get Married" - Varalakshmi Sarathkumar

“திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” - வரலட்சுமி சரத்குமார்

“திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” - வரலட்சுமி சரத்குமார்
விமல்-வரலட்சுமி சரத்குமார் ஜோடியாக நடித்துள்ள படம் கன்னி ராசி. பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். ஷமீம் இப்ராகிம் தயாரித்துள்ளார். முத்துக்குமரன் இயக்கி உள்ளார்.
கன்னி ராசி படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது வரலட்சுமி சரத்குமார் கூறியதாவது:-

“புதிய இயக்குனர்கள் படங்களில் நடிப்பது எனக்கு பிடிக்கும். இந்த படத்தின் கதை வசனத்தை படிக்கும்போது விழுந்து விழுந்து சிரித்தேன். படக்குழுவினர் சுறுசுறுப்பாக பணியாற்றினர். படமும் நன்றாக வந்துள்ளது. இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து தயாராகி உள்ளது.

நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புதிய அனுபவமாக இருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் ஜாலியான படமாக வந்துள்ளது. இந்த படத்தில் அதிகமான நடிகர்கள் உள்ளனர். முந்தைய படங்களில் இவ்வளவு அதிகமான நடிகர்களுடன் நான் நடித்தது இல்லை.”

இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் விமல் பேசும்போது, “கன்னிராசி படம் சிறப்பாக வந்துள்ளது. நான் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறேன். பல படங்களில் பல கதாநாயகிகளுடன் நடித்து இருக்கிறேன். இந்த படத்தில் ஒரு ஆம்பளையோடு நடித்து இருக்கிறேன். கன்னிராசி கலகலப்பான படமாக தயாராகி உள்ளது. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.