சினிமா செய்திகள்

பிகில் படக்குழுவினர் 400 பேருக்கு நடிகர் விஜய் மோதிரம் பரிசு + "||" + Actor Vijay's ring gift for Pigil film crew 400 persons

பிகில் படக்குழுவினர் 400 பேருக்கு நடிகர் விஜய் மோதிரம் பரிசு

பிகில் படக்குழுவினர் 400 பேருக்கு நடிகர் விஜய் மோதிரம் பரிசு
‘பிகில்’ படத்தில் தந்தை, மகன் என்று 2 வேடங்களில் விஜய் நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக வருகிறார். விவேக், டேனியல் பாலாஜி, கதிர், யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். அட்லி இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
 ‘பிகில்’  படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக வருகிறார். சொந்த குரலில் ஒரு பாடலையும் பாடி உள்ளார்.

‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடி இருக்கிறார். பெண்களை போற்றும் வகையிலும் அவர்களை சாதிக்க தூண்டும் வகையிலும் இந்த பாடல் உருவாகி உள்ளது. “சிங்கப்பெண்ணே ஆணினமே உன்னை வணங்குமே நன்றிக்கடன் தீர்ப்பதற்கே, நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு. அன்னை, தங்கை, மனைவி என்று நீ வடித்த வியர்வை உந்தன் பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும் என்பன போன்ற வரிகள் உள்ளன.

இந்த பாடலில் விஜய்யுடன் இணைந்து ஏ.ஆர்.ரகுமான் ஒரு காட்சியில் நடித்துள்ளார். சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்த பிகில் படத்தில் விஜய் நடித்த காட்சிகள் முடிந்துள்ளன. இதனால் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர்-நடிகைகள், துணை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் 400 பேருக்கு பிகில் என்ற பெயர் பொறிக்கப்பட்ட தங்க மோதிரங்களை விஜய் பரிசாக வழங்கினார்.

கால்பந்து வீராங்கனைகளாக நடித்தவர்களுக்கு தனது கையெழுத்திட்ட கால்பந்தையும் பரிசாக வழங்கினார். விஜய் வழங்கிய மோதிரம் மற்றும் கால்பந்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். பிகில் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் நடித்த `பிகில்', தீபாவளிக்கு உறுதி
விஜய் நடித்து, அட்லி இயக்கிய ‘பிகில்’ படம் தீபாவளிக்கு வருவது உறுதி என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார்.
2. பிகில் படக்குழு வெளியிட்ட விஜய், நயன்தாராவின் புதிய ‘போஸ்டர்’
பிகில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
3. விஜய் படப்பிடிப்பு தொடங்கியது
விஜய்க்கு 64-வது படம். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
4. நடிகர் விஜயுடன் இணைகிறார் விஜய் சேதுபதி -அதிகாரபூர்வ அறிவிப்பு
நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
5. பிகில் விழாவுக்கு எந்த அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது? கல்லூரி நிர்வாகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்பு
பிகில் விழாவுக்கு எந்த அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது? என கல்லூரி நிர்வாகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது.