சினிமா செய்திகள்

பாடகரான விக்ரம் மகன் + "||" + Son of singer Vikram

பாடகரான விக்ரம் மகன்

பாடகரான விக்ரம் மகன்
விக்ரம் மகன் துருவ், ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தில் கதாநாயகனாக அறி முகமாகி உள்ளார்.
விக்ரம் மகன் துருவ், ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தில் கதாநாயகனாக அறி முகமாகி உள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வெற்றிகரமாக ஓடி வசூல் அள்ளிய ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகிறது. ஏற்கனவே இந்த படத்தை வர்மா என்ற பெயரில் பாலா இயக்கினார்.

ஆனால் காட்சிகள் திருப்தியாக இல்லை என்று முழு படத்தையும் கைவிட்டு விட்டனர். அதன்பிறகு மீண்டும் புதிதாக ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் படப்பிடிப்பை நடத்தினர். தற்போது இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், இசைகோர்ப்பு, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.

இந்த நிலையில் ஆதித்ய வர்மா படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை துருவ் விக்ரம் பாடி உள்ளதாக அறிவித்து உள்ளனர். இதன் மூலம் முதல் படத்திலேயே பாடகராகவும் அவர் அறிமுகமாகி உள்ளார். விக்ரமும் பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதித்ய வர்மா படத்தில் துருவுடன் பனிதா சாந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அர்ஜுன் ரெட்டி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கி உள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.