பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு


பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு
x
தினத்தந்தி 18 Aug 2019 2:19 PM GMT (Updated: 18 Aug 2019 2:19 PM GMT)

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருள் ஒருவரான, ஆர்யா இதுவரை 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நான் கடவுள், ராஜா ராணி, மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார். 

தற்போது ஆர்யா, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடித்த காப்பான் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. நடிகர் ஆர்யா சினிமா மட்டுமல்லாது, சைக்கிள் ரைடராக பல தேசிய சைக்கிள் போட்டிகளில் பங்கேற்று உள்ளார். மேலும் நடிகர் சங்க தேர்தலின் போது சைக்கிளில் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். 

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்கிறார். ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியின் பந்தய தூரம் 1200 கிலோ மீட்டர் ஆகும். இந்த போட்டியில் நடிகர் ஆர்யா தனது குழுவினருடன் பங்கேற்கிறார். அண்மையில், ஆர்யா அணிக்கான சீருடையை நடிகர் சூர்யா அறிமுகம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story