சினிமா செய்திகள்

"தேசிய விருது கிடைக்கவில்லையே என கவலை வேண்டாம்" - கவிஞர் வைரமுத்து + "||" + Don't worry about not getting a national award Vairamuthu

"தேசிய விருது கிடைக்கவில்லையே என கவலை வேண்டாம்" - கவிஞர் வைரமுத்து

"தேசிய விருது கிடைக்கவில்லையே என கவலை வேண்டாம்" - கவிஞர் வைரமுத்து
தேசிய விருது கிடைக்கவில்லை என்பதற்காக தமிழ் திரைப்பட கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னை தேனாம்பேட்டையில் அப்பலோ மருத்துவமனை சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து,

தமிழ் படங்களுக்கு தேசிய விருது வழங்கப்படாததில் அரசியல் இருப்பதாக நான் கருதவில்லை. தேசிய விருது கிடைக்கவில்லை என்பதற்காக தமிழ் திரைப்பட கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம். 

தேசிய விருது கிடைக்கவில்லை என்றாலும் மக்கள் பேசும் விருது கிடைத்துள்ளது. ஒரு படத்திற்கு தேசிய விருதை விட மக்கள் பேசிய விருது தான் பெரியது என்று கூறினார்.