கிறிஸ்துமஸ் பண்டிகையில் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்


கிறிஸ்துமஸ் பண்டிகையில் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்
x
தினத்தந்தி 19 Aug 2019 12:39 AM GMT (Updated: 2019-08-19T06:09:12+05:30)

விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், தனுசின் பட்டாசு ஆகிய படங்களையும் தீபாவளிக்கு கொண்டு வர திட்டமிட்டு இப்போது அவை தள்ளிப்போகின்றன.

பெரிய நடிகர்கள் படங்களை பண்டிகையில் திரைக்கு கொண்டுவர வேண்டும் என்றும், மற்ற நாட்களை சிறுபட்ஜெட் படங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. அதன்படி விஜய் நடிப்பில் தயாராகி வரும் பிகில் தீபாவளிக்கு வருகிறது.

விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், தனுசின் பட்டாசு ஆகிய படங்களையும் தீபாவளிக்கு கொண்டு வர திட்டமிட்டு இப்போது அவை தள்ளிப்போகின்றன. டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் சூர்யாவின் சூரரை போற்று, சிவகார்த்திகேயனின் நம்ம விட்டு பிள்ளை ஆகிய 2 படங்கள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் தனுசின் மாரி-2, ஜெயம் ரவியின் அடங்க மறு, சிவகார்த்திகேயனின் கனா, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம், விஜய்சேதுபதியின் சீதக்காதி ஆகிய 5 படங்கள் வெளியானது. இப்போது சூரரை போற்று, நம்ம வீட்டு பிள்ளை ஆகிய 2 படங்கள் மட்டுமே வருவதால் அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூரரை போற்று படத்தை இறுதிச்சுற்று வெற்றி படத்தை எடுத்து பிரபலமான சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இதில் கதாநாயகியாக அனுபமா பாலமுரளி வருகிறார். நம்ம வீட்டு பிள்ளை படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் என்று 2 நாயகிகள் உள்ளனர்.

Next Story