சினிமா செய்திகள்

சுந்தர் சி. இயக்கும் புதிய படத்தில்விஷால்-தமன்னா-ஐஸ்வர்யா லட்சுமி + "||" + Sundar c. In the directing new film Vishal

சுந்தர் சி. இயக்கும் புதிய படத்தில்விஷால்-தமன்னா-ஐஸ்வர்யா லட்சுமி

சுந்தர் சி. இயக்கும் புதிய படத்தில்விஷால்-தமன்னா-ஐஸ்வர்யா லட்சுமி
சுந்தர் சி. டைரக்‌ஷனில், ‘ஆக்‌ஷன்’ என்ற புதிய படம் தயாராகி இருக்கிறது. இதில், விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார்.
நகைச்சுவை, குடும்ப படம், திகில், பேய் படம், அதிரடி சண்டை படம் என அனைத்து தரப்பட்ட கதைகளை படமாக்கி வெற்றி கண்டவர், சுந்தர் சி. இவரது டைரக்‌ஷனில், ‘ஆக்‌ஷன்’ என்ற புதிய படம் தயாராகி இருக்கிறது. இதில், விஷால் கதாநாயகனாக-ராணுவ உயர் அதிகாரி வேடத்தில் நடித்து இருக்கிறார். அவர் ஒரு உண்மையை கண்டுபிடிக்க பல நாடுகளுக்கு செல்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

அதனால் அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் கார் துரத்தல் காட்சிகள் நிறையவே இடம் பெற்றுள்ளன. அதில், ‘டூப்’ இல்லாமல் விஷால் நடித்து இருக்கிறார். இதற்காக தயாரிப்பாளர் டிரைடென்ட் ரவி பல கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

துருக்கி, தாய்லாந்து, பேங்காக் ஆகிய நாடுகளிலும், சென்னை, ஜெய்ப்பூர், ரிஷிகேஷ், டேராடூன், ஐதராபாத் ஆகிய நகரங்களிலும் படப்பிடிப்பு நடந்தது. படத்தில் விஷால் ஜோடியாக தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகிய இருவரும் நடித்துள்ளனர். யோகி பாபு, ராம்கி, சாயசிங், பழ.கருப்பையா, இந்தி நடிகர் கபீர்சிங் ஆகியோரும் நடித்து இருக்கி றார்கள்.