சினிமா செய்திகள்

யோகிபாபு படத்துக்கு எதிர்ப்பு + "||" + For the film Yogibabu Protest

யோகிபாபு படத்துக்கு எதிர்ப்பு

யோகிபாபு படத்துக்கு எதிர்ப்பு
ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தில் ரஜினிகாந்துக்கு எதிரான வசனங்கள் இருப்பதாக ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பியது.
இதைத்தொடர்ந்து ஆட்சேபகரமான வசனங்களை நீக்கிவிட்டு படத்தை திரைக்கு கொண்டு வந்தனர். இப்போது யோகிபாபு, வருண் நடிப்பில் தயாராகும் பப்பி படமும் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

இந்த படத்தை முரட்டு சிங்கிள் இயக்குகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இதில் ஒரு பக்கத்தில் நித்யானந்தா சாமியாரின் படமும் இன்னொரு பக்கத்தில் ஆபாச படங்களில் நடிக்கும் ஜான்னி சின்ஸ் புகைப்படமும் இடம்பெற்று உள்ளது.


இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிவசேனா கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மனுவில் கூறியிருப்பதாவது:-

“வருண், யோகிபாபு நடிக்கும் ‘பப்பி’ படத்துக்காக நித்யானந்தாவையும், நிர்வாண படங்களில் நடிக்கும் அமெரிக்காவை சேர்ந்த ஜான்னி சின்ஸையும் இணைத்து முன்னோட்டம் வெளியிட்டு உள்ளனர். இது இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும் இளைஞர்கள் மனதில் வக்கிர எண்ணத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே படத்தின் இயக்குனர் முரட்டு சிங்கிள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சை காட்சிகளை நீக்கிய பிறகே படத்தை திரைக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குகநாதனின் அடுத்த படத்திலும் யோகிபாபு
வி.சி.குகநாதனின் ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்து இருக்கிறார். புகழ்மணி இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.