சினிமா செய்திகள்

“பாரதிராஜாவுடன் நடித்த அனுபவம்” -சசிகுமார் + "||" + With touring Played experience Sasikumar

“பாரதிராஜாவுடன் நடித்த அனுபவம்” -சசிகுமார்

“பாரதிராஜாவுடன் நடித்த அனுபவம்” -சசிகுமார்
பெண்கள் கபடி விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ள கென்னடி கிளப் படத்தில் பாரதிராஜாவும், சசிகுமாரும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. பாரதிராஜாவுடன் நடித்த அனுபவம் குறித்து சசிகுமார் கூறியதாவது:-

“பள்ளியில் படித்தபோதே எனக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தது. விளையாட்டை மையப்படுத்தி வரும் படங்களும் மிகவும் பிடிக்கும். எந்த மொழியில் வந்தாலும் பார்த்து விடுவேன். நானும் விளையாட்டுகளில் ஆர்வமாக கலந்துகொள்வேன். விளையாட்டை மையப்படுத்திய படத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆர்வம் இருந்தது. அது கென்னடி கிளப் படத்தில் நிறைவேறி உள்ளது. இது பெண்கள் கபடியை பற்றிய படம். இந்த மாதிரி கதையம்சம் உள்ள படம் இப்போதைய கால கட்டத்துக்கு ரொம்ப அவசியம்.


படத்தில் பாரதிராஜா எனது குருவாக நடித்து இருக்கிறார். பாரதிராஜாவின் மகளுக்கு கபடி சொல்லி கொடுக்கும் பயிற்சியாளராக வருகிறேன். எனக்கும், பாரதிராஜாவுக்கும் படத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும். அது சுவாரஸ்யமாக இருக்கும். பாரதிராஜாவுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

தொடர்ச்சியாக நிறைய படங்களில் நடிக்கிறேன். அவற்றை முடித்த பிறகே மீண்டும் படம் இயக்குவது பற்றி யோசிப்பேன். கென்னடி கிளப் படத்தில் பெண்களின் வலி, கபடியின் பிரச்சினைகள் எல்லாவற்றையும் வணிகரீதியாக சொல்லி இருக்கிறோம். எல்லோருக்கும் பிடிக்கிற படமாக இருக்கும்.” இவ்வாறு சசிகுமார் கூறினார்.