சினிமா செய்திகள்

முதல் தடவையாக கமல்ஹாசன் படத்தில் விவேக்? + "||" + For the first time ever Vivek in Kamal Haasan movie

முதல் தடவையாக கமல்ஹாசன் படத்தில் விவேக்?

முதல் தடவையாக கமல்ஹாசன் படத்தில் விவேக்?
கமல்ஹாசன் நடித்து 1996-ல் திரைக்கு வந்த ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘இந்தியன்-2’ என்ற பெயரில் தயாராகிறது.
இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் கமலின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை இயக்குனர் ஷங்கர் நிறுத்திவிட்டார்.

பின்னர் வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வைத்து கமல்ஹாசனின் வயதான தோற்றத்தில் மாற்றம் செய்தனர். இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. சென்னை பூந்தமல்லி அருகே அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகிறார்கள். கமல்ஹாசன் தவிர மற்ற நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். 28-ந் தேதியில் இருந்து கமல்ஹாசன் நடிக்க உள்ளார்.


இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் வருகிறார். ரகுல்பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் என்று மேலும் 3 கதாநாயகிகளையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். வித்யூத் ஜமால் வில்லனாக வருகிறார். இந்த நிலையில் இந்தியன்-2 படத்தில் நடிக்க விவேக்குடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷங்கர் இயக்கிய பாய்ஸ், அந்நியன், சிவாஜி ஆகிய படங்களில் விவேக் நடித்துள்ளார். ஆனால் இதுவரை கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தது இல்லை. இப்போது முதல் முறையாக கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியன்-2 படத்தில் விவேக் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.