சினிமா செய்திகள்

அப்புக்குட்டியை கவர்ந்த ‘வாழ்க விவசாயி’ + "||" + valga vivasayi

அப்புக்குட்டியை கவர்ந்த ‘வாழ்க விவசாயி’

அப்புக்குட்டியை கவர்ந்த ‘வாழ்க விவசாயி’
இன்று நாட்டில் பற்றி எரிகிற பிரச்சினையாக உருவெடுத்து நிற்கிறது, விவசாயிகள் சார்ந்த பிரச்சினை. இதை கருவாக வைத்து உருவாகியிருக்கும் படம், ‘வாழ்க விவசாயி.’
வாழ்க விவசாயி படத்தில் கதைநாயகனாக தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி நடித்து இருக்கிறார். கதைநாயகியாக வசுந்தரா வருகிறார்.  பி.எல்.பொன்னிமோகன் டைரக்டு செய்ய, கதிரேசன் தயாரித்துள்ளார்.

“எனக்கு மிகவும் பிடித்த கதை, இது. ஆசைப்பட்டு விரும்பி நடித்த படம். நான் ஒரு விவசாயியின் மகன். எனக்கும் விவசாயம் தெரியும். நாற்று நடுவது, களை எடுப்பது, கதிர் அடிப்பது, அறுவடை செய்வது வரை எனக்கு எல்லா விவசாய வேலைகளும் தெரியும். எனவே இந்த படத்தில் நடிப்பது மிகவும் சுலபமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது” என்கிறார், அப்புக்குட்டி.