சினிமா செய்திகள்

‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில்பேயாக நடிக்கிறார், யோகி பாபு! + "||" + Ghost Acting Yogi Babu

‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில்பேயாக நடிக்கிறார், யோகி பாபு!

‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில்பேயாக நடிக்கிறார், யோகி பாபு!
யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகியோர் ‘காவி ஆவி நடுவுல தேவி’ என்ற நகைச்சுவை-திகில் படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.
‘காவி ஆவி நடுவுல தேவி’  படத்தில் கதாநாயகனாக புதுமுகம் ராம் சுந்தர், கதாநாயகியாக பிரியங்கா நடிக்கிறார்கள். இந்த படத்தில், பேய் வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். அவர் பேயாக வந்து 50-க்கும் மேற்பட்ட கவர்ச்சி நடன அழகிகளுடன் சேர்ந்து ஆடுவது போல் ஒரு காட்சி படமானது.

“இந்திரன் கெட்டதும் பிகராலே சந்திரன் கெட்டதும் பிகராலே” என்ற பாடல் காட்சிக்கான நடனத்தை டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் அமைத்தார். படத்தின் கதையை வி.சி.குகநாதன் எழுத, புகழ்மணி வசனம் எழுதி டைரக்டு செய்தார். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.