டி.வி தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்ததாக - நடிகை புகார்


டி.வி தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்ததாக - நடிகை புகார்
x
தினத்தந்தி 23 Aug 2019 12:00 AM GMT (Updated: 2019-08-23T05:30:37+05:30)

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் படுக்கைக்கு அழைத்ததாக டி.வி தொகுப்பாளர்கள் ஸ்வேதா ரெட்டி, காயத்ரி குப்தா ஆகியோர் புகார் கூறினர்.

தெலுங்கு ‘பிக்பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சி ஏற்கனவே சர்ச்சைகளில் சிக்கியது. இதில் கலந்து கொள்ள நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் படுக்கைக்கு அழைத்ததாக டி.வி தொகுப்பாளர்கள் ஸ்வேதா ரெட்டி, காயத்ரி குப்தா ஆகியோர் புகார் கூறினர். இந்த புகாரின் பேரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவும் செய்தனர்.

இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடாது என்று நடிகர் நாகர்ஜுனா வீட்டின் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பை மீறி பிக்பாஸ் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட டி.வி நடிகை ரோகிணிரெட்டி வெளியேற்றப்பட்டு உள்ளார்.

சினிமா வாய்ப்பு தேடியபோது பாலியல் தொல்லைகளை சந்தித்ததாக ரோகிணி ரெட்டி புகார் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“நான் பி.டெக் படித்து முடித்து இருக்கிறேன். எனக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இருந்தது. ஐதராபாத்தில் உள்ள எஸ்.ஆர்.நகரில் ஒரு விடுதியில் தங்கி நடிக்க வாய்ப்பு தேடினேன். டி.வி தொடர்களில் நடிக்கவும் வாய்ப்பு கேட்டேன். அப்போது ஒரு தொடரில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க என்னை தேர்வு செய்தனர்.

அந்த குழுவை சேர்ந்த ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். இதனால் அந்த வாய்ப்பை உதறி விட்டேன். இதுபோல் இன்னொரு பாலியல் தொல்லையையும் சந்தித்தேன். இவ்வாறு ரோகிணி ரெட்டி கூறியுள்ளார்.

Next Story