தேசிய விருது கிடைக்காதது வருத்தமா? ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்


தேசிய விருது கிடைக்காதது வருத்தமா? ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்
x
தினத்தந்தி 23 Aug 2019 2:30 AM GMT (Updated: 23 Aug 2019 12:16 AM GMT)

‘மெய்’ படத்தில், நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

மருத்துவ சிகிச்சை தொடர்பான ‘மெய்’ படத்தில், நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். சார்லி, கிஷோர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதையொட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“மெய் படம் மருத்துவம் தொடர்பான குற்றங்களை அடிப்படையாக கொண்ட உண்மை கதை. நானே இது போன்ற கஷ்டத்தை அனுபவித்தேன். ஒரு தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் என்று சென்ற எனக்கு சம்பந்தமே இல்லாமல் பரிசோதனைகள் செய்து ரூ.1 லட்சம் பில் போட்டார்கள்.

ஒரு பெண் மருத்துவரிடம் வெறும் ரூ.350 கொடுத்து சிகிச்சை பெற்று 12 மணி நேரத்தில் சரியானது. மெய் படத்தில் மருந்து கம்பெனி பிரதிநிதியாக வருகிறேன். பெரிய இயக்குனர், புதுமுக இயக்குனர் என்று பாகுபாடு பார்க்காமல் நடிக்கிறேன். மெய் படத்தில் புதுமுகம் நிக்கி சுந்தரம் தான் கதாநாயகன்.

அடுத்து க/பெ ரண சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, வானம் கொட்டட்டும் படங்களில் நடிக்கிறேன். கனா படத்துக்கு எனக்கு தேசிய விருது கிடைக்காதது பற்றி எல்லோரும் வருத்தப்பட்டார்கள். எனக்கு வருத்தம் இல்லை. தேசிய விருது அறிவிப்பையே கவனிக்கவில்லை. கீர்த்தி சுரேஷ் தேசிய விருதுக்கு முழு தகுதி உடையவர்.” இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.

Next Story