சினிமா செய்திகள்

யுனிசெப் நல்லெண்ண தூதர்: பிரியங்கா சோப்ராவை நீக்க கோரி பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வி + "||" + Pakistan's campaign to remove Priyanka Chopra as UNICEF Goodwill Ambassador falls flat as organisation backs actor

யுனிசெப் நல்லெண்ண தூதர்: பிரியங்கா சோப்ராவை நீக்க கோரி பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வி

யுனிசெப் நல்லெண்ண தூதர்: பிரியங்கா சோப்ராவை நீக்க கோரி பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வி
யுனிசெப் நல்லெண்ண தூதரான பிரியங்கா சோப்ராவை நீக்குவதற்கு பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.
ஜம்மு-காஷ்மீர் குறித்த இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை  பிரியங்கா சோப்ரா  பகிரங்கமாக ஆதரித்ததால் சில நாட்களுக்கு முன்பு, ஐ.நா.வின் நல்லெண்ண தூதரான பிரியங்கா சோப்ரா ஜோனாஸை நீக்கக்கோரி பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரி யுனிசெப்பிற்கு ஒரு கடிதம் எழுதினார்.

அவர் அந்த கடிதத்தில் "ஐ.நா யுனிசெப் அமைதிக்கான நல்லெண்ண தூதராக நீங்கள் நியமித்திருக்கும்  பிரியங்கா சோப்ராவின் பிரச்சினை குறித்து உங்கள் கவனத்தில் கொண்டு வர விரும்புகிறேன். பிரியங்கா சோப்ரா இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பகிரங்கமாக ஆதரித்துள்ளார், மேலும் பாகிஸ்தானுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் விடுத்த அணுசக்தி அச்சுறுத்தலையும்  ஆதரித்துள்ளார்" என கூறி இருந்தார்.

இப்போது, பாகிஸ்தானின்  கடிதத்திற்கு பதிலளித்த ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்ரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்  கூறும் போது,

யுனிசெப் நல்லெண்ண தூதர்கள் தங்கள் தனிப்பட்ட திறனில் பேசுகிறார்கள், அவர்கள் ஆர்வமுள்ள அல்லது அக்கறை கொண்ட பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது.

அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் அல்லது செயல்கள் யுனிசெப்பின் கருத்துக்களை பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் யுனிசெப் சார்பாக பேசும்போது, அவர்கள் யுனிசெப்பின் சான்றுகள் சார்ந்த பக்கச்சார்பற்ற நிலைப்பாடுகளை கடைபிடிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என கூறினார்.

யுனிசெப் நல்லெண்ண தூதர்கள், குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக தங்கள் நேரத்தையும் அவர்களின் பொது சுயவிவரத்தையும் தாராளமாக முன்வந்து ஒப்புக் கொண்ட முக்கிய நபர்கள் ஆவார்கள் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆண்டி என அழைத்ததால் 4 வயது குழந்தையை மோசமான வார்த்தையால் திட்டிய நடிகை
ஆண்டி என அழைத்ததால் 4 வயது குழந்தையை பாலிவுட் நடிகை ஒருவர் மோசமான வார்த்தையால் திட்டி உள்ளார்.
2. சென்னை வசூலில் பாகுபலி 2-வை மிஞ்சிய விஜயின் பிகில்
நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ கூட்டணியில் வெளியாகியுள்ள 'பிகில்' படம் வசூலில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
3. முகமூடி அணிந்து புகைப்படம் வெளியிட்ட பிரியங்கா சோப்ராவை சாடிய ரசிகர்கள்
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுவினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வாகன போக்குவரத்து முடங்கி உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.
4. இதயம் என் இதயத்தை தொட்டது இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பாரதிராஜா
இதயம் என் இதயத்தை தொட்டது இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பாரதிராஜா ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
5. அதிகம் வசூல் செய்த முதல் 10 தமிழ்ப் படங்களில் விஜய்யின் பிகில்
அதிகம் வசூல் செய்த முதல் 10 தமிழ்ப் படங்களில் விஜய்யின் பிகில் இடம் பிடித்துள்ளது.