சினிமா செய்திகள்

போர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது + "||" + Actress Kuthu Ramya Love is broken

போர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது

போர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது
கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்த ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா தமிழில் பொல்லாதவன், குத்து, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். காங்கிரஸ் சார்பில் 2013-ம் ஆண்டு மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

இதே தொகுதியில் 2014-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அதன்பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப பிரிவு தலைவியாக நியமிக்கப்பட்டார்.


சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் ரம்யா மாயமானார். அவரும் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ரபேலும் காதலிப்பதாகவும் துபாயில் நடக்க இருந்த இவர்கள் திருமணம் ரத்தாகி விட்டதாகவும் தகவல் வெளியானது. இதற்கு ரம்யாவின் தாய் ரஞ்சிதா விளக்கம் அளித்து கூறியதாவது:-

“ரம்யாவுக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. திருமணம் முடிவாகும்போது வெளிப்படையாக அறிவிப்போம். ரம்யாவின் திருமணம் குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். ரம்யா அரசியலிலும் ரபேல் அவரது தொழிலிலும் கவனம் செலுத்தியதால் அதிகம் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை.

மேலும் ரம்யாவுக்கு இந்தியாவை விட்டு செல்ல விருப்பம் இல்லை. ரபேலுக்கும் போர்ச்சுக்கல்லை விட்டு வர மனமில்லை. இதனால் இருவரும் பரஸ்பரம் பேசி பிரிந்து விட்டனர் என்பதுதான் உண்மை. இப்போது அவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகையை மணந்த மறுநாள் 75 வயது நடிகர் ஆஸ்பத்திரியில் அனுமதி
நடிகையை மணந்த மறுநாள் 75 வயது நடிகர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.