சினிமா செய்திகள்

இனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி + "||" + No more Spiderman pictures Unsurprisingly, fans are shocked

இனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி

இனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி
சூப்பர் ஹீரோ வரிசையில் வரும் ஸ்பைடர் மேன் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 2002-ல் ஸ்பைடர்மேன் படம் வெளியானது.
2004-ல் ஸ்பைடர்மேன்-2, 2007-ல் ஸ்பைடர்மேன்-3 ஆகிய படங்கள் வெளிவந்தன. பின்னர் 2012-ல் ‘த அமேசிங் ஸ்பைடர்மேன்,’ 2014-ல் ‘த அமேசிங் ஸ்பைடர்மேன் 2’ 2017-ல் ஸ்பைடர்மேன் ஹோம் கமிங் படங்கள் வந்தன.

கடைசியாக சமீபத்தில் ‘ஸ்பைடர்மேன் பார் பிரம் ஹோம்’ வெளியாகி வசூல் குவித்தது. இதுவரை 7 ஸ்பைடர் மேன் படங்கள் வந்துள்ளன. இந்த நிலையில் ஸ்பைடர்மேன் வரிசை படங்கள் இனிமேல் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஸ்பைடர்மேன் திரைப்படங்கள் சோனி மற்றும் டிஸ்னி ஆகிய 2 நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு வருகின்றன.


இதில் வரும் லாபத்தில் அதிக பங்கு சோனி நிறுவனத்துக்கு செல்வதுபோல் ஒப்பந்தம் போட்டு இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது டிஸ்னி நிறுவனம் லாபத்தில் 50 சதவீதம் கேட்டு உள்ளது. இதற்கு சோனி ஒப்புக்கொள்ளாதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமான இனிமேல் ஸ்பைடர்மேன் படங்களை தயாரிக்கப் போவதில்லை என்று மார்வெல் தலைவர் கெவின் பெய்ஜ் அறிவித்து உள்ளார். இது ஸ்பைடர்மேன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்பைடர்மேனை காப்பாற்றுங்கள் என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.