சினிமா செய்திகள்

“காதலை தேடி ஓட வேண்டாம்” - நித்யா மேனன் + "||" + Dont run away in search of love Nithya Menon

“காதலை தேடி ஓட வேண்டாம்” - நித்யா மேனன்

“காதலை தேடி ஓட வேண்டாம்” - நித்யா மேனன்
நித்யாமேனன் நடித்துள்ள ‘மிஷன் மங்கள்’ இந்தி படம் திரைக்கு வந்துள்ளது. அடுத்து ஜெயலலிதா வாழ்க்கை கதை படத்தில் நடிக்க தயாராகிறார். 2 மலையாள படங்களும் கைவசம் உள்ளன.
“காதலை தேடி ஓட வேண்டாம்” - காதல் பற்றி நித்யாமேனன் அளித்த பேட்டி வருமாறு:-

“காதலிக்க இன்னொருவர் தேவை இல்லை. நம்மை நாமே காதலால் நிரப்பினால் உலகம் அன்பு மயமாகும். சந்தோஷமாக இருக்கிறவன் அதை மற்றவர்களுக்கு கொடுப்பான். அன்பு நிறைந்த மனிதர்கள் அந்த அன்பைத்தான் மற்றவர்களுக்கு பகிர்வார்கள்.


அன்பு என்ற காதல் அனுபவமாக இருக்க கூடாது அதை அனுபவிப்பதாக இருக்க வேண்டும். உன்னை நீ நேசித்துக்கொள் உன்னை விட நல்லவர்கள் யாரும் இல்லை. காதல் என்பதை தவறாக புரிந்து கொள்கிறோம். ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தையை தவறாக பார்க்கிறோம். மற்றவர்கள் மேல் காட்டும் அன்பு, நம் மீது நாம் வைத்துள்ள அன்பு என்று காதல் பலவிதம்.

காதலை எங்கோ தேடி அலைகிறார்கள். காதல் உலகத்தில் எங்கேயோ இல்லை. அது நமக்குள்ளேயே இருக்கிறது. உள்ளே இருக்கிற அன்பை வெளிப்படுத்தலாம். அதுதான் உண்மையான அன்பு. காதல் நம்மிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். அன்பு உங்களிடம் இல்லாதபோது அடுத்தவர்களிடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஓடக்கூடாது.

எல்லா மனிதர்களுமே மற்றவர்கள் நம்மை நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். முதலில் நம்மை நாமே நேசிக்க வேண்டும்.” இவ்வாறு நித்யாமேனன் கூறினார்.