சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி படத்தில் ஜான்சி ராணி வேடத்தில் அனுஷ்கா + "||" + Vijay Sethupathi in the movie In the role of Queen of Jhonsi Anushka

விஜய்சேதுபதி படத்தில் ஜான்சி ராணி வேடத்தில் அனுஷ்கா

விஜய்சேதுபதி படத்தில் ஜான்சி ராணி வேடத்தில் அனுஷ்கா
ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற பெயரில் படமாகி உள்ளது.
‘சைரா நரசிம்ம ரெட்டி’ இதில் சிரஞ்சீவி கதாநாயகனாக வருகிறார். அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீப் உள்ளிட்ட பிறமொழி நடிகர்களும் நடித்துள்ளனர். சுரேந்தர் ரெட்டி இயக்கி உள்ளார்.

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியிடுகிறார்கள். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. பாகுபலிக்கு இணையான கிராபிக்ஸ் காட்சிகளுடன் படத்தை எடுத்துள்ளனர். ரூ.240 கோடி செலவில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தயாரித்துள்ளார்.


படத்தின் முன்னுரை காட்சியில் அந்தந்த மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களை பேசவைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழில் ரஜினிகாந்த் குரல் கொடுக்க பேசி வருகிறார்கள். இந்த நிலையில் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் அனுஷ்காவும் நடித்து இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் படமாக்கி உள்ளனர். படத்தில் அனுஷ்கா விடுதலை போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமிபாய் வேடத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. போர்க்களத்தில் சோர்வடைந்த நிலையில் இருக்கும் படை வீரர்களுக்கு நரசிம்ம ரெட்டியின் வீரம் மற்றும் தேசப்பற்றை வீராவேசமாக அனுஷ்கா விளக்கி சொல்வது போன்று திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது.