நீக்கிய 25 காட்சிகளுக்கு அனுமதி கிடைக்குமா? காஜல் அகர்வால் படம் இன்று மறுதணிக்கை


நீக்கிய 25 காட்சிகளுக்கு அனுமதி கிடைக்குமா? காஜல் அகர்வால் படம் இன்று மறுதணிக்கை
x
தினத்தந்தி 26 Aug 2019 1:00 AM GMT (Updated: 2019-08-26T00:37:26+05:30)

‘குயின்’ படம் தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்தியில் கங்கனா ரணாவத் நடித்துள்ள ‘குயின்’ படம் தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லரில் ஆபாச காட்சிகள் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் 25 காட்சிகளை வெட்டி நீக்கினர். இதை படக்குழுவினர் எதிர்த்து மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்பினார்கள். இதுகுறித்து காஜல் அகர்வால் கூறும்போது, ‘பாரிஸ், பாரிஸ்’ படத்தில் 25 காட்சிகளை தணிக்கை குழுவினர் நீக்கியதை அறிந்து அதிர்ச்சியானேன். மலையாளம், தெலுங்கில் குயீன் ரீமேக் படத்துக்கு எந்த காட்சியையும் நீக்காமல் ‘யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். தமிழ் நாட்டில் மட்டும் எதிர்ப்பது ஏன் என்று புரியவில்லை என்றார்.

“தணிக்கை குழுவினர் நீக்கி உள்ள காட்சிகள் நமது நிஜ வாழ்க்கையில் அன்றாடம் நடக்க கூடியது. அதனை நீக்கியது வேதனை அளிக்கிறது. எந்த காட்சியையும் நீக்காமல் படத்தை திரைக்கு கொண்டு வர வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் மறு தணிக்கை குழுவினர் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தை இன்று பார்க்கின்றனர். 25 காட்சிகளை நீக்கியதை ரத்து செய்து படத்தை வெளியிட அனுமதி கிடைக்குமா? என்பது இன்று மாலை தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story