சினிமா செய்திகள்

புதிய படத்துக்கு தயாராகும் விஜய், அஜித் + "||" + Ready for the new movie Vijay, Ajith

புதிய படத்துக்கு தயாராகும் விஜய், அஜித்

புதிய படத்துக்கு தயாராகும் விஜய், அஜித்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு, கதிர் ஆகியோரும் உள்ளனர். விஜய் தந்தை, மகன் என்று 2 வேடங்கள் ஏற்றுள்ளார். பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து தயாராகி உள்ளது. தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.


இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். இந்த படத்தை மாநகரம் படத்தை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். அடுத்த வருடம் கோடையில் திரைக்கு வருகிறது. இதில் நடிக்க விஜய் தயாராகிறார். இது அவருக்கு 64-வது படம் ஆகும். படப்பிடிப்பை விரைவில் தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

அஜித்குமார் வக்கீல் வேடத்தில் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைக்கு வந்துள்ளது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மீண்டும் வினோத் இயக்கத்திலும் போனிகபூர் தயாரிப்பிலும் புதிய படத்தில் அஜித் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பையும் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

இதில் அஜித் பைக் பந்தய வீரராக நடிப்பதாக கூறப்படுகிறது. கார் பந்தயம் மற்றும் பைக் பந்தய காட்சிகள் படத்தில் இடம்பெறுகின்றன. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்காக அஜித் உடல் எடையை குறைத்து இளமை தோற்றத்துக்கு மாறியுள்ள புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது தான் வரலாறு -அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது தான் வரலாறு என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
2. மீண்டும் பேரரசு இயக்கத்தில் விஜய்?
அட்லி இயக்கத்தில் விஜய்யின் 63-வது படமாக தயாராகி உள்ள ‘பிகில்’ தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
3. கவுண்டி கிரிக்கெட்டில் ஆடுகிறார், விஜய்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜய், இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட உள்ளார்.
4. சமூக வலைத்தளத்தில் விஜய் - அஜித் ரசிகர்கள் கடும் மோதல்
விஜய், அஜித்குமார் இடையே நட்பு நிலவுகிறது. ஆனால் இருவரின் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக்கொள்ளும் நிகழ்வுகள் நடக்கின்றன.
5. தீபாவளிக்கு விஜய், தனுஷ் படங்கள் மோதல்
தீபாவளிக்கு எந்தெந்த படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய்யின் பிகில் தீபாவளிக்கு வரும் என்று ஏற்கனவே அறிவித்தனர்.