சினிமா செய்திகள்

சமூக வலைத்தளத்தில் கமலின் இந்தியன்-2 கதை கசிந்ததா? + "||" + Social website The story Kamal Indian-2

சமூக வலைத்தளத்தில் கமலின் இந்தியன்-2 கதை கசிந்ததா?

சமூக வலைத்தளத்தில் கமலின் இந்தியன்-2 கதை  கசிந்ததா?
இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இந்தியன்-2 என்ற பெயரில் ஷங்கர் இயக்கி வருகிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் வருகிறார்.
கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இந்தியன்-2 என்ற பெயரில் ஷங்கர் இயக்கி வருகிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் வருகிறார். சித்தார்த், ரகுல்பிரித் சிங், பிரியா பவானிசங்கர், வித்யூத் ஜமால் ஆகியோரும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே தொடங்கி உள்ளது.


இந்த நிலையில் இந்தியன்-2 படத்தின் கதை கசிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது.

சமூக ஆர்வலரான சித்தார்த், மனைவி ரகுல் பிரீத்சிங்குடன் வசிக்கிறார். சொந்தமாக யூடியூப் சேனலும் நடத்துகிறார். ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அவர் யூடியூப் சேனலில் அரசியல்வாதிகள் ஊழல்களை அம்பலப்படுத்துகிறார். அவருக்கு மிரட்டல்கள் வருகின்றன. வெளிநாட்டில் இருக்கும் வயதான கமல்ஹாசன் அந்த யூடியூப் சேனலை பார்த்து கொதிக்கிறார்.

ஊழல் அரசியல்வாதிகளை களையெடுக்கும் நோக்கோடு விமானம் ஏறி சென்னைக்கு வருகிறார். இறந்துபோன மனைவியின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு சித்தார்த்தை சந்திக்கிறார். அவரிடம் இருந்து ஊழல் செய்து சொத்து குவித்த அரசியல்வாதிகள் பட்டியலை பெறுகிறார்.

பின்னர் வர்ம கலையால் ஒவ்வொருவராக அழிக்கிறார். அவருக்கு சித்தார்த்தும் வர்ம கலை பற்றி ஆராய்ச்சி செய்யும் காஜல் அகர்வாலும் உதவி செய்கிறார்கள். அரசியல்வாதில் வர்மகலையால் கொல்லப்படுவதை பார்த்து போலீசார் அதிர்கிறார்கள். கமலை பிடிக்க வலை விரிக்கிறார்கள். அவர் சிக்கினாரா? என்பது கிளைமாக்ஸ்.

இந்த கதை வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆனாலும் இது இந்தியன்-2 கதைதானா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. சமூக வலைத்தளத்தில் இந்தியன்-2 புகைப்படங்கள் கசிந்தன
இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசன் தீவிரமாக நடித்து வருகிறார். காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால் ஆகியோரும் உள்ளனர்.