சினிமா செய்திகள்

காதலனை பிரிந்தார் நடிகை இலியானா? + "||" + Have Ileana D'Cruz and Andrew Kneebone broken up? Couple unfollow and delete photos with each other

காதலனை பிரிந்தார் நடிகை இலியானா?

காதலனை பிரிந்தார் நடிகை இலியானா?
இலியானாவும் அவரது காதலர் ஆண்ட்ரூவும் பிரிந்து விட்டார்கள். ஒருவருக்கொருவர் பகிர்ந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கி உள்ளனர்.
மும்பை,

தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்த இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானாவும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூவ் நீபோனும் காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள் என்றும் கூறப்பட்டது.

இருவரும் நெருக்கமாக படம் எடுத்து சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு வந்தனர். இலியானா படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு ஆண்ட்ரூவ் தவறாமல் வந்து விடுவார். இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் வதந்தி பரவியது. 

இலியானாவின்  கவர்ச்சி புகைப்படங்கள் பெரும்பாலானவை ஆண்ட்ரூவால் கிளிக் செய்யப்பட்டவையாகும். மேலும் இலியானா அடிக்கடி தனது தலைப்புகள் மூலம் அவரை 'கணவன்' என்று குறிப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில்  இருவரும் பிரிந்து விட்டதாகவும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வது இல்லை என்றும், சந்தித்து கொள்வதும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இலியானா மற்றும் ஆண்ட்ரூவின் இன்ஸ்டாகிராம் பக்கங்களைப் பார்த்தால்,  அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பின்தொடரவில்லை, மேலும் புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர்.

முன்னதாக ரெய்டு படத்தின்  டிரெய்லர் வெளியீட்டின் போது, இலியானா திருமணமானவரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது;-

 "வெளிப்படையாக என்ன கருத்து தெரிவிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. தொழில் ரீதியாக, நான் நன்றாகவே இருக்கிறேன். தனிப்பட்ட முறையில், நான் நன்றாகவே இருக்கிறேன். நன்றி. 

இதற்கு எந்தக் கருத்தும் கூற வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கையை நான் வைத்திருக்கிறேன். அது மிகவும் தனிப்பட்டது. இதைப்பற்றி அதிகம் பேச நான் விரும்பவில்லை, ஆனால் உலகம்  இதைத்தான் அதிகம் பேசுகிறது" என கூறினார்.

இது குறித்து ஐ.ஏ.என்.எசுக்கு அவர் அளித்த பேட்டியில், "ஒரு உறவு அல்லது காதல் என்ன என்பது பற்றி எனக்கு வேறுபட்ட கருத்து இருந்தது. அதைப்பற்றி நான் விசித்திரமான கற்பனையில் இருந்தேன். ஆனால் அது மிகவும் வித்தியாசமானது.

சில சூழ்நிலைகளில் சமரசம் செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் உங்களுக்கு நிறைய மரியாதை கிடைக்க  வேண்டும் என கூறினார்.View this post on Instagram

#Repost @thegoodquote ♥️

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on


தொடர்புடைய செய்திகள்

1. வில்லன் நடிகர் நவாசுதீன் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்ட மனைவி ஆலியா
ரஜினிகாந்த் பட வில்லன் நடிகர் நவாசுதீன் சித்திக் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்ட அவரது மனைவி ஆலியா
2. இந்தியாவுக்கு ஜாக்கி சான் மூலம் சமாதான செய்தி வழங்கும் சீனா
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் இந்தியாவுக்கு ஜாக்கி சான் மூலம் சமாதான செய்தி சீனா வழங்கி உள்ளது.
3. நடிகர் விஜயின் மாஸ்டர் டிரைலர் மரண மாஸாக இருக்கும் - நடிகர் அர்ஜூன் தாஸ்
நடிகர் விஜயின் மாஸ்டர் டிரைலர் மரண மாஸாக இருக்கும் என நடிகர் அர்ஜூன் தாஸ் கூறி உள்ளார்.
4. கொரோனா வைரஸ் ஆபத்து: குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு பறந்த சன்னி லியோன்
சன்னி லியோன் குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு பறந்துள்ளார், அங்கு கண்ணுக்கு தெரியாத கொலையாளி கொரோனா வைரஸுக்கு எதிராக பாதுகாப்பாக இருப்போம் என்று நாங்கள் உணர்கிறோம் என்று கூறி உள்ளார்.
5. என் வருங்கால குழந்தைகளின் அன்னைக்கு...நயன்தாராவை குறிப்பிட்ட விக்னேஷ் சிவன்
என் வருங்கால குழந்தைகளின் அன்னைக்கு... என நயன்தாராவை குறிப்பிட்டு விக்னேஷ் சிவன் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து உள்ளார்.