சினிமா செய்திகள்

தொழிலதிபருக்கு மிரட்டல் விடுத்ததாக நடிகை மீரா மிதுன் வழக்குப்பதிவு + "||" + two new cases filed against meera mithun

தொழிலதிபருக்கு மிரட்டல் விடுத்ததாக நடிகை மீரா மிதுன் வழக்குப்பதிவு

தொழிலதிபருக்கு மிரட்டல் விடுத்ததாக நடிகை மீரா மிதுன் வழக்குப்பதிவு
மிரட்டல் விடுப்பதாக தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், நடிகை மீரா மிதுன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை

2019ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றவரும், சில திரைப்படங்களில் நடித்தவருமான நடிகை மீரா மிதுன், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர்.

அவர் மாடலிங் துறையை சேர்ந்த தொழிலதிபரான ஜோ மைக்கேல் பிரவீன் என்பவருடன், பேஸ்புக் வழியாக அறிமுகமான நிலையில் இருவரும் 2017ம் ஆண்டு முதல் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

பணப்பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் இருவரும் பிரிந்து விட்ட நிலையில், மீரா மிதுன் தொழிலதிபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்த மீரா மிதுன் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, ஜோ மைக்கேல் பிரவீன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் தற்போது எழும்பூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகை மீரா மிதுன் மீது, ஆபாசமாக பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்
ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு.
2. நாகையில், 144 தடை உத்தரவை மீறிய 169 பேர் மீது வழக்கு - 150 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
நாகையில் 144 தடை உத்தரவை மீறிய 169 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 150 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
3. தமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1,100 பேர் மீது வழக்குப் பதிவு
தமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1,100 பேர் மீது வழக்குப் பதிவு
4. போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடி செய்ததாக 2 பேர் மீது வழக்குப்பதிவு
போலி ஆவணங்களை தயாரித்து நில மோசடி செய்ததாக 2 பேர் மீது நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. வேலூரில் 2 மணி நேரத்தில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாத 692 பேர் மீது வழக்கு - சிறப்பு வாகன தணிக்கையில் போலீசார் நடவடிக்கை
வேலூரில் 2 மணி நேரம் நடந்த சிறப்பு வாகன தணிக்கையில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாத 692 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.