சினிமா செய்திகள்

சத்யராஜ்-சிபிராஜ் இணையும் சஸ்பென்ஸ்-திகில் படம் + "||" + Sathyaraj-Sibiraj joins suspense-horror film

சத்யராஜ்-சிபிராஜ் இணையும் சஸ்பென்ஸ்-திகில் படம்

சத்யராஜ்-சிபிராஜ் இணையும் சஸ்பென்ஸ்-திகில் படம்
சத்யராஜும், அவருடைய மகன் சிபி ராஜும் இதற்கு முன்பு, ‘ஜாக்சன் துரை’ படத்தில் இணைந்து நடித்து இருந்தார்கள். அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
‘சத்யா’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி இவர் கூறியதாவது:-

“சத்யராஜ், சிபிராஜ் இருவரும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். இரண்டு பேரும் மீண்டும் இணைந்து நடிக்கும் படத்தை தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். சத்யராஜ்-சிபிராஜுடன் நாசர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

சைமன் கே.கிங் இசையமைக்கிறார். இது, சஸ்பென்ஸ் நிறைந்த திகில் படம். படப் பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் தொடங்கி ஒரே கட்டமாக நடைபெற்று ஜனவரி மாதம் முடிவடையும்.”