சினிமா செய்திகள்

‘காக்கி’ படத்தில் போலீஸ் அதிகாரிகளாக விஜய் ஆண்டனி-ஸ்ரீகாந்த் + "||" + Vijay Antony, Srikanth are police officers in the film 'Khaki'

‘காக்கி’ படத்தில் போலீஸ் அதிகாரிகளாக விஜய் ஆண்டனி-ஸ்ரீகாந்த்

‘காக்கி’ படத்தில் போலீஸ் அதிகாரிகளாக விஜய் ஆண்டனி-ஸ்ரீகாந்த்
விஜய் ஆண்டனி தற்போது, ‘காக்கி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருடன் சத்யராஜ், ஸ்ரீகாந்த் ஆகியோரும் போலீஸ் அதிகாரி வேடங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்துஜா  கதாநாயகியாக நடிக்கிறார். ரவிமரியா, ஜான் விஜய், ஈஸ்வரிராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் வருகிறார்கள். ஏ.செந்தில்குமார் டைரக்டு செய்கிறார். 

இவர், சாந்தனு நடித்த ‘வாய்மை’ படத்தை டைரக்டு செய்தவர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, அவ்கத் இசையமைக்கிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை, பெங்களூரு, ஷிமோகா ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அக்டோபர் மாதத்தில் படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடையும். 2020-ல் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.