சினிமா செய்திகள்

விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி..? + "||" + Vijay Sethupathi as villain to Vijay ..?

விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி..?

விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி..?
நடிகர் விஜய்யின் 64-வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில், ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள "பிகில்" திரைப்படம் தீபாவளி அன்று வெளிவர உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.  

இதனைத்தொடர்ந்து,  நடிகர் விஜய் தனது  64-வது திரைப்படத்தில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைக்கோர்க்கிறார்.  இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இத்திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நடிகர் விஜய்யின் 64-வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக விஜய் சேதுபதியை படத்தின் இயக்குனர் அணுகியுள்ளதாகவும், எனினும் கால்சீட்டை பொறுத்து படத்தில் நடிப்பது குறித்து முடிவு எடுப்பதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக "பேட்ட" திரைப்படத்தில்  விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி?
விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.