சினிமா செய்திகள்

காதலை முறித்த நடிகை இலியானா + "||" + actress Ileana love Broke

காதலை முறித்த நடிகை இலியானா

காதலை முறித்த நடிகை இலியானா
இலியானா காதலர் ஆண்ட்ரூவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை குத்து ரம்யா சமீபத்தில் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த காதலர் ரபேலுடன் மோதல் ஏற்பட்டு நிச்சயமான திருமணத்தை நிறுத்தினார். இப்போது நடிகை இலியானாவும் காதலை முறித்துள்ளார். இவர் தமிழில் கேடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கு, இந்தி மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானாவுக்கும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ நீபோன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றினார்கள். ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. அதனை இருவரும் உறுதிப்படுத்தவில்லை.

காதலை பற்றி இலியானா வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்தார். ஆனாலும் காதலர் ஆண்ட்ரூவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் காதலருடன் இலியானாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின் தொடர்ந்து வந்ததை நிறுத்தி விட்டனர். ஆண்ட்ரூவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் இருந்து இலியானா நீக்கி விட்டார். கடந்த ஜூலை மாதம் ஆண்ட்ரூ தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு காதலை பிரதிபலிக்கும் குறுந்தகவலை இன்ஸ்டாகிராமில் இலியானா அனுப்பி இருந்தார். அதையும் இப்போது நீக்கி விட்டார். காதலை முறித்த காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.