சினிமா செய்திகள்

“திரைக்கு வராமல் 450 படங்கள் முடங்கி இருக்கின்றன”-டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் + "||" + Director RV Udayakumar speech

“திரைக்கு வராமல் 450 படங்கள் முடங்கி இருக்கின்றன”-டைரக்டர் ஆர்.வி.உதயகுமார்

“திரைக்கு வராமல் 450 படங்கள் முடங்கி இருக்கின்றன”-டைரக்டர் ஆர்.வி.உதயகுமார்
திரைக்கு வர முடியாமல் 450 படங்கள் முடங்கிக் கிடக்கின்றன என்று டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் பேசினார்.
தண்டகன் என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் நாயகனாக அபிஷேக், நாயகியாக அஞ்சு கிருஷ்ணா நடித்துள்ளனர். இந்த படத்தை வி. இளங்கோவன் தயாரித்துள்ளார். கே.மகேந்திரன் டைரக்டு செய்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

“இன்று படம் எடுத்து வெளியிடுவது சிரமமாக இருக்கிறது. எதிர்பார்த்த வசூலும் இல்லை. நடிகர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் 10 லட்சத்தை முன்பணமாகக் கொடுத்து விட்டு 90 லட்சத்தை வசூலில் இருந்து எடுத்துக் கொடுக்கும்படி வரைமுறைப்படுத்த வேண்டும். பெரிய ஹீரோக்கள் ரூ.100 கோடி, 60 கோடி, 50 கோடி என்று வாங்கிவிட்டு தன் படம் ஓடினால் மட்டும் போதுமென்று நினைப்பதை மாற்ற வேண்டும். அமெரிக்காவில் இருப்பது போல் இங்கேயும் வசூலில் பங்கு என்கிற முறை வரவேண்டும். இந்த முறைப்படுத்துதல் செய்தால் தான் சினிமா நன்றாக இருக்கும்.

திரைக்கு வர முடியாமல் 450 படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. ஒரு படத்திற்கு இரண்டு கோடி என்றால் கூட ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இப்படி முடங்கிக் கிடக்கிறது. இந்த குறைபாடுகளை போக்க வேண்டும். தண்டகன் படம் வெற்றிபெற வாழ்த்துகள்.

இவ்வாறு ஆர்.வி.உதயகுமார் பேசினார்.

டைரக்டர் கே. மகேந்திரன் பேசும்போது. “ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தண்டகன் தயாராகி உள்ளது’ என்றார்.

கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், நடிகர் அஸ்வின், சனம் ஷெட்டி ஆகியோரும் பேசினர்.