சினிமா செய்திகள்

தர்பார் படப்பிடிப்பில் பாதுகாப்பை மீறிரஜினி நடித்த காட்சிகள் மீண்டும் கசிந்தன + "||" + Rajinikanth starring in Darbar

தர்பார் படப்பிடிப்பில் பாதுகாப்பை மீறிரஜினி நடித்த காட்சிகள் மீண்டும் கசிந்தன

தர்பார் படப்பிடிப்பில் பாதுகாப்பை மீறிரஜினி நடித்த காட்சிகள் மீண்டும் கசிந்தன
ரஜினி நடித்த காட்சிகள் மீண்டும் கசிந்தன
இணையதளத்தில் வெளியான ரஜினிகாந்த, நயன்தாரா நடித்த காட்சி.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு வட இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதில் ரஜினிகாந்த் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். தர்பார் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. ரஜினிகாந்துக்கு போலீஸ் சீருடை அணிவித்து ஸ்டூடியோவில் வைத்து ‘போட்டோ சூட்’ நடத்திய புகைப்படம் இணையதளத்தில் வெளியானது. அதன்பிறகு ரஜினிகாந்த், யோகிபாபு ஆகியோர் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா நடந்து வருவது போன்ற காட்சிகள் வெளிவந்தன.

இதைப் பார்த்த சிலர் படப்பிடிப்பு முடியும் முன்பு அனைத்து காட்சிகளும் இப்படி சமூக வலைத்தளத்தில் வந்துவிடும் என்று மீம்ஸ் போட்டனர். இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை சுற்றிலும் பாதுகாப்பை வலுப்படுத்தினர். செல்போன் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது. பார்வையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை.

கடும் பாதுகாப்பையும் மீறி ஜெய்ப்பூரில் உள்ள பின்க் நகரில் தற்போது நடந்து வரும் தர்பார் படப்பிடிப்பு காட்சிகளை திருட்டுத்தனமாக படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி தோற்றத்தில் கார் அருகே நிற்கிறார். அவர் பக்கத்தில் நயன்தாராவும் நின்று கொண்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். இன்னும் 2 வாரங்கள் இதே ஊரில் படப்படிப்பை நடத்த உள்ளனர்.