சினிமா செய்திகள்

‘மீ டூ’ இயக்கத்துக்கு பிறகும் பாலியல் தொல்லைகள் - நடிகை பாயல் ராஜ்புட் + "||" + After the Me To Do movement Sexual harassment - Actress Boyal Rajput

‘மீ டூ’ இயக்கத்துக்கு பிறகும் பாலியல் தொல்லைகள் - நடிகை பாயல் ராஜ்புட்

‘மீ டூ’ இயக்கத்துக்கு பிறகும் பாலியல் தொல்லைகள் - நடிகை பாயல் ராஜ்புட்
‘மீ டூ’ இயக்கத்துக்கு பிறகும் பாலியல் தொல்லைகள் நடப்பதாக நடிகை பாயல் ராஜ்புட் தெரிவித்துள்ளார்.

நடிகைகள் தொடர்ந்து ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறி வருகிறார்கள். பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இதில் சிக்கி உள்ளனர். தமிழில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ஏஞ்சல் படத்தில் நடித்து வரும் பாயல் ராஜ்புட்டும் பாலியல் தொல்லைகளை சந்தித்ததாக தெரிவித்து உள்ளார். இவர் தெலுங்கில் ‘ஆர்.எக்ஸ்.100’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே படுக்கை அறை காட்சிகளில் நெருக்கமாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியிருந்தார். தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் குற்றச்சாட்டுகளை தெரிவித்து அவர் கூறியதாவது:-

“நான் நடித்த ‘ஆர்.எக்ஸ்.100’ படம் திரைக்கு வந்ததும் நிறைய பாலியல் தொல்லைகள் வந்தன. என்னை படுக்கைக்கு அழைத்தார்கள். பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். படுத்துத்தான் பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதில் எனக்கு விருப்பம் இல்லை. 6 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் வேலை பார்த்தேன். அப்போதும் இதே மாதிரி பாலியல் தொல்லைகள் ஏற்பட்டன. ‘மீ டூ’ இயக்கம் பரபரப்பான பிறகும் படுக்கைக்கு அழைக்கும் தொல்லைகள் குறையாமல் தொடர்கின்றன. சில பெண்கள் தைரியமாக வெளிப்படுத்துகிறார்கள். நானும் இதை வெளியே சொல்வதால் சிலர் என்னை வெறுக்கிறார்கள்.” இவ்வாறு பாயல் ராஜ்புட் கூறினார்.