சினிமா செய்திகள்

மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயராம் + "||" + Mani Ratnam direct Jayaram role in 'PonniyinSelvan' movie

மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயராம்

மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயராம்
டைரக்டர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகர் ஜெயராம் நடிக்க உள்ளார்.

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை ஐஸ்வர்யாராய் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது என்று அவர் கூறினார். தற்போது பிரபல மலையாள நடிகர் ஜெயராமும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வாகி இருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதை ஜெயராம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார். என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. பொன்னியின் செல்வனில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பட்டியலை விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளை புகுத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரண்மனை அரங்கு தயார்!
மணிரத்னம் டைரக்‌ஷனில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது.
2. சர்ச்சையில் சிக்கிய ஷேன் நிகம்: விக்ரம் படத்தில் இருந்து நீக்கம்
நடிகர் ஷேன் நிகம் சர்ச்சையில் சிக்கியதால், விக்ரம் படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
3. தனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி
தனுஷ் நடித்துள்ள படமான ‘பட்டாஸ்’ 1,500 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளதாக பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
4. நடிகை தீபிகா படுகோனேவின் படத்தை புறக்கணிப்பது தவறானது - சிவசேனா சொல்கிறது
டெல்லி மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகை தீபிகா படுகோனேவின் படத்தை புறக்கணிப்பது தவறானது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.
5. அஜித்குமார் படத்தில் இலியானா?
அஜித்குமார் படத்தில் இலியானா நடிக்க உள்ளாரா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.