சினிமா செய்திகள்

‘பிகில்’ படத்துடன் மோதுகிறது: தீபாவளிக்கு கார்த்தியின் ‘கைதி’ ரிலீஸ் + "||" + The Biggle clashes with the Film: Karthi's 'Kaithi' Release For Diwali

‘பிகில்’ படத்துடன் மோதுகிறது: தீபாவளிக்கு கார்த்தியின் ‘கைதி’ ரிலீஸ்

‘பிகில்’ படத்துடன் மோதுகிறது: தீபாவளிக்கு கார்த்தியின் ‘கைதி’ ரிலீஸ்
தீபாவளிக்கு வெளியாக உள்ள கார்த்தியின் ‘கைதி’ படம், விஜய்யின் ‘பிகில்’ படத்துடன் மோத உள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய்-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘பிகில்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்து உள்ளனர். தீபாவளி பண்டிகையான அக்டோபர் 27-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 24-ந்தேதி வியாழக்கிழமையே படத்தை திரைக்கு கொண்டுவருவது குறித்து படக்குழுவினர் யோசிக்கின்றனர்.

இதுபோல் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இதில் கதாநாயகிகளாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் சந்தர் இயக்கி உள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள கமலா என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

பிகில், சங்கத்தமிழன் ஆகிய 2 படங்களும் தீபாவளிக்கு மோதுவது உறுதியான நிலையில் இப்போது கார்த்தி நடித்துள்ள கைதி படத்தையும் தீபாவளி பண்டிகையில் திரைக்கு கொண்டு வருவதாக அறிவித்து உள்ளனர். கைதி படத்தில் ராஷ்மிகா மந்தனா, நரேன், ஜார்ஜ் மரியான், ரமணா, யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.

முழுக்க இரவில் எடுக்கப்பட்ட அதிரடி திகில் படமாக கைதி தயாராகி உள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படம் தீபாவளிக்கு வருவது கார்த்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஷாலின் ஆக்‌ஷன், தனுசின் பட்டாஸ் ஆகிய படங்களும் தீபாவளிக்கு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பீதிக்கு மத்தியிலும் தீபாவளிக்கு வேகமாக முன்பதிவு ஆகும் சிறப்பு ரெயில் டிக்கெட்டுகள்
கொரோனா பீதிக்கு மத்தியிலும் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு ரெயில்களில் வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.