சினிமா செய்திகள்

’தி வெயிட் இஸ் ஓவர்’ நடிகர் விஜய்யின் பிகில் தீபாவளி ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு + "||" + The wait is over and let the games begin Our Thalapathy’s ⁦#Bigil produced by Kalpathi S Aghoram

’தி வெயிட் இஸ் ஓவர்’ நடிகர் விஜய்யின் பிகில் தீபாவளி ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

’தி வெயிட் இஸ் ஓவர்’ நடிகர் விஜய்யின் பிகில் தீபாவளி ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு
’தி வெயிட் இஸ் ஓவர்’ விஜய்யின் பிகில் படம் தீபாவளி ரிலீஸ் ஆகிறது உறுதி செய்தார் தயாரிப்பாளர்.
சென்னை: 

அட்லி இயக்கத்தில் விஜய்-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘பிகில்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்து உள்ளனர். தீபாவளி பண்டிகையான அக்டோபர் 27-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 24-ந்தேதி வியாழக்கிழமையே படத்தை திரைக்கு கொண்டு வருவது குறித்து படக்குழுவினர் யோசிக்கின்றனர்.

 தீபாவளி அன்று விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்' மற்றும் கார்த்தியின் 'கைதி' ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்ட நிலையில், 'பிகில் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

இதனை அடுத்து 'பிகில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி இந்த படம் தீபாவளி அன்று வெளியாவது உறுதி என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். தளபதியின் இடத்தை தீபாவளி அன்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ரசிக்க தயாராகுங்கள் என்றும் ' தி வெயிட் இஸ் ஓவர்' என்றும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பிகில், கைதி மற்றும் சங்கத்தமிழன் ஆகிய மூன்று திரைப்படங்கள் தீபாவளி அன்று வெளியாவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் அர்ச்சனா கல்பாதி அட்டகாசமான 'பிகில்' திரைப்படத்தின் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். விஜய், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்பட பலர் இருக்கும் இந்த புகைப்படம் பெருமளவில் வரவேற்பை பெற்று வருகிறது