சினிமா செய்திகள்

அஜய்தேவ்கான் ரூ.7 கோடிக்கு கார் வாங்கினார் + "||" + Ajay DevganRs.7 crores Bought the car

அஜய்தேவ்கான் ரூ.7 கோடிக்கு கார் வாங்கினார்

அஜய்தேவ்கான் ரூ.7 கோடிக்கு கார் வாங்கினார்
பிரபல இந்தி நடிகர் அஜய்தேவ்கான். இவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
தமிழில் மின்சார கனவு, வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களிலும் பல இந்தி படங்களிலும் நடித்துள்ள கஜோலின் கணவர். தற்போது பாகுபலி படத்தை எடுத்து பிரபலமான ராஜமவுலி இயக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.


அஜய்தேவ்கான் கார்கள் மீது பிரியம் கொண்டவர். புதிதாக சந்தைக்கு வரும் ஆடம்பர கார்களை உடனே வாங்கி விடுவார். இவரிடம் பி.எம்.டபுள்யு 5 சீரிஸ், ரேஞ்ச் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், ஆடி கியூ 7, வால்வோ எக்ஸ்சி 90, மெர்சிடிஸ் ஜிஎச் கிளாச் உட்பட நிறைய கார்கள் உள்ளன.

தற்போது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் என்ற காரை புதிதாக வாங்கி இருக்கிறார். இந்த காரின் விலை ரூ.6.95 கோடி ஆகும். இந்தியாவில் தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, பூஷன்குமார் ஆகியோர் மட்டுமே இந்த வகையான காரை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அஜய்தேவ்கானை அஜித்குமாரின் புதிய படத்தில் வில்லனாக நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் அஜய்தேவ்கானிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.