சினிமா செய்திகள்

சமூகத்தில் நடிகைகளுக்கு மரியாதை உள்ளது தபு கருத்து + "||" + In society There is respect for actresses Tabu Commentary

சமூகத்தில் நடிகைகளுக்கு மரியாதை உள்ளது தபு கருத்து

சமூகத்தில் நடிகைகளுக்கு மரியாதை உள்ளது தபு கருத்து
தமிழில் இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தபு இந்தி, தெலுங்கு பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.
திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போட்ட அவர் 10 ஆண்டுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

நடிகைகளுக்கு சினிமாவில் பெயரும் புகழும் கிடைத்து உள்ளன. சமூகத்தில் தனி மரியாதையும் கிடைத்து இருக்கிறது. நாங்கள் எங்கு சென்றாலும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு கைகுலுக்கவும், செல்பி எடுக்கவும் முண்டியடிக்கிறார்கள். எங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் ரசிகர்கள்தான். எனவே அவர்களோடு செல்பி எடுத்து சந்தோஷப்படுத்த வேண்டியது எங்கள் கடமை. அதனால் செல்பி எடுக்க ஒப்புக்கொள்கிறேன். பல நேரம் அது கஷ்டமாக இருந்தாலும் மறுக்க முடியாது. நடிகையாகும் முன்பு இருந்ததை விட நடிகையாகி சொந்த காலில் நின்ற பிறகு வீட்டிலும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். செய்கிற தொழிலை வைத்துத்தான் முக்கியத்துவம் கிடைக்கிறது. தெலுங்கில் நான் நடித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தி படத்தில் நடித்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. பிடித்தமான கதாபாத்திரம் கிடைக்காததால் இத்தனை காலம் நடிக்காமல் இருந்தேன். இப்போது எதிர்பார்த்த மாதிரி கதை அமைந்ததால் நடிக்கிறேன்.” இவ்வாறு தபு கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...